தமிழகத்தில் பெட்ரோல்-டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி உயர்வு – பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் ரூ.2.50 காசும் அதிகரிப்பு

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசலுக்கு ரூ.2.50 காசும் உயர்கின்றது.

சென்னை, மே-3

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக தொழில்களும் முடங்கி உள்ளன. இதனால் அரசுக்கான வரி வருவாயும் மிகக் குறைவாகவே உள்ளது. அரசிற்கு அதிகமான வருவாய் கொடுக்கும் டாஸ்மாக் கடைகளும் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டு வரி 28% லிருந்து 34% ஆகவும், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி 20% லிருந்து 25% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 -ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 -ம் உயரும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *