தமிழகத்தை மிரட்டும் கொரோனா.. ஒரே நாளில் 266 பேருக்கு உறுதி.. 3 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

சென்னை, மே-3

இதுபற்றி தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் புதிதாக 203 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,458 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக ஒருவர் பலியானதையடுத்து, தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. அதேசமயம் இன்று மேலும் 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *