கர்நாடகாவில் மதுக்கடைகளை மே 4-ம் தேதி முதல் திறக்க அனுமதி

கர்நாடகா மாநிலத்தில் சிறப்பு மண்டல பகுதிகளை தவிர எஞ்சிய இடங்களில் உள்ள மதுக்கடைகளை மே 4-ம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, மே-2

இந்தியாவில் 37 ஆயிரத்து 776 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த கொடிய வைரசுக்கு நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 223 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் மதுக்கடைகளை மே 4-ம் தேதி முதல் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. சிவப்பு மண்டல பகுதிகளை தவிர எஞ்சிய இடங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் திறக்கலாம். மதுப்பிரியர்கள் 3 அடி சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து மது வாங்கி செல்ல வேண்டும். மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார்களுக்கு அனுமதியில்லை என அம்மாநில கலாத்துறை மந்திரி நாகேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *