தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 2757ஆக உயர்வு..

தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,757 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, மே-2

இதுபற்றி தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் புதிதாக 231 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,257 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்றைக்கு மேலும் ஒருவர் பலியாக தமிழகத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 29 ஆக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1,30,132 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 10,127 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3,100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 47 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குணமடைந்தோர் விகிதம் அதிகமாக உள்ளது.

சென்னையில் மக்கள்தொகை அதிகம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று கொரோனாவால் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,828 ஆண்கள், 928 பெண்கள், 1 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது என தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *