பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி: பிரதமர் மோடிக்கு கமல் வேண்டுகோள்

சென்னை, அக்டோபர்-02

பேனர் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தமிழகத்தில் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசுகின்றனர். தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய மாநில அரசுகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தனது ட்விட்டர் பதிவில்,

மாண்புமிகு பிரதமர் அவர்களே, தமிழ்நாடும், தமிழர்களும் சுபஸ்ரீயின் மரணத்தை ஏற்றுக்கொள்ளத் தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், உங்கள் வருகைக்காக பேனர்கள் வைக்க தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை அணுகி அனுமதி கோரியுள்ளது. இந்த ஆபத்தான பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் நீங்கள் முன்னோடியாகத் திகழ்ந்தால் அது தமிழர்களின் உணர்வின் மீது உங்களுக்கிருக்கும் அக்கறையைக் காட்டும். அதுவே உங்களுக்கு மிகப்பெரிய விளம்பரத்தைத் தரும். ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *