இந்தியாவில் கொரோனா பாதிப்பு 38 ஆயிரத்தை நெருங்கியது..இதுவரை 1223 பேர் பலி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,223-ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி, மே-2

இந்தியாவில் கொரோனா வைரசாலை பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,776-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,223-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 10,018 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *