அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி கண்ணாத்தாள் காலமானார்

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் மனைவி கண்ணாத்தாள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 67.

திண்டுக்கல், மே-2

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள்(67) கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம்.காலனியில் இன்று காலமானார். இந்த தகவல் அமைச்சர் சீனிவாசனுக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து அவர் திண்டுக்கல் புறப்பட்டார். இதனிடையே, உறவினர்களும், கட்சிக்காரர்களும் எதிர்க்கட்சியினரும், நகரில் உள்ள முக்கிய பிரமுகர்களும் திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம். காலனியில் இருக்கும் இல்லத்திற்கு சென்று வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஐந்து மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *