திருவாரூர், அரியலூர் , கடலூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

திருவாரூர், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மே-2

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் இந்தியாவில் தமிழகம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகத் திருவாரூர், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாளை (03/05/2020) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பில் மருத்துவமனை, மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மட்டுமே செயல்படும் எனத் தெரிவித்துள்ளனர். முழு ஊரடங்கு காலத்தில் மருந்து கடைகள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், பத்திரிகைகள், தொலைக்காட்சி பணியாளர்களை தவிர வேறு யாரும் வெளியே வர அனுமதியில்லை. மளிகை கடை, காய்கறி கடை, பேக்கரி உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *