அமைச்சர் வேலுமணி தந்த நிவாரணப் பொருட்களை ஸ்கூட்டரில் அள்ளிச் சென்ற திமுக தொண்டர்..!

கோவை, மே-2

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றியும், வருவாயின்றியும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P. வேலுமணி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பொது  மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி கண்காணித்து வருகிறார். அந்தந்த தொகுதி அதிமுக எம்.எல்.ஏ க்கள், அதிமுக உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மூலம் நிவாரணப் பொருட்கள் பொதுமக்களுக்கு  சென்றடைவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.             அதே நேரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரில் வீதி வீதியாகவும், வீடு வீடாகவும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொகுதி மக்களுக்கு சாதி, மத, கட்சி பேதமின்றி நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வருமானம் இல்லாமல் தவிக்கும் இந்த நேரத்தில் வீடு தேடி வந்து அரிசி, பருப்பு, புளி, எண்ணெய் , மளிகைப் பொருட்களை அமைச்சர் வேலுமணி கொடுப்பதால், மாற்றுக் கட்சியினரும் மனமுவந்து பெற்றுக் கொள்கிறார்கள். நேற்று தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் S.P. வேலுமணி வழங்கிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய 3 அட்டைப் பெட்டிகளை திமுக தொண்டர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றதை மக்கள் வெகுவாக ரசித்தனர். இதே தொகுதிக்குள் உள்ள இடையர்பாளையத்தில் அமைச்சர் S.P. வேலுமணி மூதாட்டி ஒருவரின் விட்டுக்கே சென்று ,அவருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். மேலும், திண்ணையில் அமர்ந்து அவரிடம் அமைச்சர் S.P. வேலுமணி நலம் விசாரித்த புகைப்படம் வைர லாக மாறியது. இந்நிலையில், அதை மிஞ்சும் வைகயில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கிய நிவாரணப் பொருட்களுடன் திமுக தொண்டர் ஸ்கூட்டரில் பறந்து சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இது பற்றி கருத்து தெரிவித்த அதிமுக நிர்வாகிகள், தொகுதி மக்கள் கஷ்டப்படக் கூடாது, இக்கட்டான காலகட்டத்தில் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அமைச்சர் S.P. வேலுமணி செயல்பட்டு வருகிறார் . கூட்டணி கட்சியினர் மட்டுமல்ல திமுக உள்ளிட்ட  மாற்றுக் கட்சியினர் வீடு தேடியும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறோம் , அவர்களும் மனமுவந்து பெறுகிறார்கள் என்று கூறினர். அவசர கால உதவிகள் அரசியலை கடந்தவையாக இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைச்சர் S.P. வேலுமணியின் சேவை நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *