வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் – மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

டெல்லி, மே-1

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் பல்வேறு இடங்களில் தவித்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு ரெயில்களை இயக்கி கொள்ளலாம். இடம் பெயரும் நபர்களுக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அறிகுறியற்றவர்களை மட்டுமே இடம் பெயர அனுமதிக்க வேண்டும். இடம் பெயரும் நபர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வலியுறுத்த வேண்டும். அவர்களின் உடல் நலம் கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *