மூதாட்டிக்கு வீட்டிற்கே சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர் வேலுமணி..!

ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டத்தில் வருவாயின்றி தவிக்கும் ஏழை எளியோருக்கு தொடர்ந்து நிவாரணப்பொருட்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கி வருகிறார்.

கோவை, மே-1

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஏழை எளிய மக்கள் பசியால் அவதியடைய கூடாது என்ற நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அம்மா உணவகங்கள் மூலம் ஏழை மக்களின் பசியை போக்கி வருகிறது.

மேலும், அதிமுக மற்றும் தமிழக அரசு சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் மக்களுக்கு நிவாரண பொருட்களாக வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் இந்தபணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், தனது தொகுதியான தொண்டாமுத்தூர் இடையர்பாளையம் சார்பில் நிவாரணப் பொருட்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரடியாக சென்று வழங்கினார்.

தொண்டாமுத்தூர் தொகுதி இடையர்பாளையத்தில் வீடு வீடாக சென்று நிவாரணப் பொருட்களை வழங்கிய போது, மூதாட்டி ஒருவரிடம் அமைச்சர் வேலுமணி நலம் விசாரித்த போது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கண்ணம்மாள் அவருடைய கணவர் மருதாசலம் ஆகியோர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததுள்ளனர்.மேலும் அவர்கள் உணவுப் பொருள்கள்கூட வாங்க முடியாமல் உள்ளது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு அப்பகுதி மக்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக மூதாட்டி கண்ணம்மாள் வீட்டிற்குச் சென்று அவருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். மேலும் அந்த மூதாட்டிக்கு ஆறுதல் தெரிவித்த அவர் உங்களுக்குப் பாதுகாப்பாக நாங்கள் எப்பொழுதும் இருப்போம் என உறுதியளித்தார்.மேலும் அந்தப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சென்று நிவாரணப் பொருள்களை வழங்கியது, அந்தப்பகுதி பொதுமக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, கோவை நல்லறம் அறக்கட்டளை தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு 3 வேளையும் உணவு வழங்குகிறது. குனியமுத்தூரில் இயங்கும் அதன் சமையற்கூடத்தை பார்வையிட்டு, மக்களுக்கு வழங்க உள்ள உணவின் தரத்தை அமைச்சர் வேலுமணி ருசித்து பார்த்தார். அப்போது பேசிய அமைச்சர் வேலுமணி, ஊரடங்கு காலத்தில் எளியோருக்கு உணவளிக்கும் தன்னார்வலர்களின் சேவையை ஊக்குவிப்போம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *