இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..சமையல் எரிவாயு விலை ரூ.192 குறைந்தது

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 192 ரூபாய் குறைந்து, ஒரு சிலிண்டர் 569 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.

சென்னை, மே-1

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து சமையல் எரிவாயு விலை உயர்ந்து வந்தது. கொரோனா வைரசால் எரிசக்தி சந்தையில் கடும் சரிவு ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது.

இந்நிலையில், இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் குறைந்துள்ளது. டெல்லியில் ஒரு சிலிண்டருக்கு ரூ.162.50 குறைந்து ஒரு சிலிண்டர் ரூ.581.50 ஆக உள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டருக்கு 192 ரூபாய் குறைந்து ரூ.569.50 என்ற அளவில் உள்ளது. மும்பையில் ரூ.714.50-ல் இருந்து ரூ.579 ஆகவும், கொல்கத்தாவில் 190 ரூபாய் குறைந்து ரூ.584.50 ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *