கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது தூத்துக்குடி

கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறியுள்ளது.

தூத்துக்குடி, மே-1

தமிழகத்தில் இதுவரை 2323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1258 பேர் குணமடைந்துள்ளனர்.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் மாறியுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே 26 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் ஒரு பெண் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறுதியாக சிகிச்சை பெற்ற நபரும் இன்று குணமடைந்து வீடு திரும்பினார்.

இதன்மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கொரோனாவை வென்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *