மீனவர்களுக்கு நல்ல செய்தி.. தலா ரூ.5000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு..

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-30

தமிழக கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜுன் மாதம் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தபோதிலும், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல எவ்வித தடையும் இல்லை. எனினும், இந்த தடைகாலங்களில் மீன்களின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த நிலையில், தொடர்ந்து மீன்பிடி தடைக்காலமும் வந்துள்ளதால் அவர்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரித்து தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.83.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *