இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 33,610-ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,610 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1075 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று 8,373 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஏப்ரல்-30

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,050-ல் இருந்து 33,610 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,074-ல் இருந்து 1,075 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8,373 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 9,915 பேரும், குஜராத்தில் 4,082 பேரும், டெல்லியில் 3,439 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2,660 பேரும், ராஜஸ்தானில் 2,438 பேரும், தமிழகத்தில் 2,162 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *