ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல்

விசாகப்பட்டினம், அக்டோபர்-02

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சதம் விளாசியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி ஆட்டம் விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் என முடிவு செய்தது.  இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் விளையாட தொடங்கினர். இதில் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 91 ரன்கள் எடுத்திருந்தது. 

ரோகித் சர்மா 84 பந்துகளில் அரை சதம் பூர்த்தி செய்தார்.  பின்னர் மீண்டும் களமிறங்கிய ரோகித் சர்மா 154 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர் உதவியுடன் சதம் அடித்து விளாசினார். இதன்பின் இந்திய அணி 35.3 ஓவர்களில் 100 ரன்களும் 47.5 ஓவர்களில் 150 ரன்களும் எடுத்தது.  இந்திய அணி 54 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 179 ரன்கள் எடுத்துள்ளது.  மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும், ரோகித் சர்மா 115 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *