தமிழகத்தை விடாது துரத்தும் கொரோனா, ஒரேநாளில் 161 பேருக்கு பாதிப்பு..

தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 161 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-30

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு 906 ஆனது. இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 48. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,258. இன்று உயிரிழப்புகள் எதுவும் இல்லை. பலி எண்ணிக்கை 27 ஆக உள்ளது.

இதுவரை செய்யப்பட்ட 1,19,748 கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனையில் இன்று மட்டும் 9,787 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1,10,718 நபர்களுக்கும் இன்று மட்டும் 9,643 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மட்டும் புதிதாக 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,323 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று பாதிக்கப்பட்ட 161 பேரில் ஆண்கள் 97 பேர், பெண்கள் 64 பேர். மொத்தமாக பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் 1,553 பேர், பெண்கள் 770 பேர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *