அம்மா உணவகங்கள் மூலம் தினமும் 7 லட்சம் பேருக்கு உணவு – அமைச்சர் SP வேலுமணி பெருமிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் உள்ளாட்சித்துறையின் கீழ் இயங்கும் அம்மா உணவகங்கள் மூலம், நாள்தோறும் 7 லட்சத்திற்கும் அதிகமான ஏழை எளியோருக்கு விலையின்றி உணவளிக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-30

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்கள், 14 மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளில் உள்ள 247 அம்மா உணவகங்கள், ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 4 அம்மா உணவகங்கள் என மொத்தம் 658 அம்மா உணவகங்களிலும் எவ்வித தடையுமின்றி யார் வேண்டுமானாலும் உணவு அருந்தலாம். பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களுக்கு ரூ. 19.54 கோடி நிதி, பிற 14 மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளுக்கு ரூ.11.85 கோடி நிதி என மொத்தம் ரூ.31.39 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 4.50 லட்சம், பிற 14 மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளில் 1.75 லட்சம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 725 நபர்கள் என மொத்தம் 6.25 லட்சம் பொது மக்கள் அம்மா உணவகங்களில் உணவு அருந்துகின்றனர். ஊரடங்கு காலம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அம்மா உணவகங்களில் மொத்தம் 2.02 கோடி இட்லிகளும், 76.67 லட்சம் கலவை சாதங்களும், 46.91 லட்சம் சாப்பாத்திகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1.22 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *