சென்னையில் அறிகுறியே இல்லாமல் 98% நபர்களுக்கு கொரோனா – ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னையில் எந்த அறிகுறியும் இல்லாமல் 98 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-30

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னையில் 98% நபர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்று இரு மடங்காகியுள்ளது. பாதுகாப்பு நலன் கருதியே கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழங்களை அதிக விலைக்கு விற்றால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை சென்னையில் 114 மெட்ரிக் டன் காய்கறித் தொகுப்புகள் விற்பனை ஆகியுள்ளன என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *