தத்தி மருமகள் ஜோதிகாவுக்கு எப்படி புரிய வைப்பது? – நித்யானந்தா கிண்டல்

கோவிலில் இருந்து கிடைக்கும் வருமானம் பாதிக்கு மேல் அரசு மூலம் மருத்துவமனை, பள்ளி, மற்றும் பிற செயல்களுக்கு பயன்படுத்த படுகிறது என்பது எப்படி சில தத்தி மருமகள்கள் மற்றும் தத்தி நடிகர்களுக்கு புரிய வைப்போம் என நித்தியானந்தா கூறியுள்ளார்.

ஏப்ரல்-30

தஞ்சை பெரிய கோவில் குறித்து நடிகை ஜோதிகா பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா, கோவில்களுக்கு செலவு செய்யும் தொகையை, தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்கு கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று கூறினார். ஜோதிகாவின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், சில தரப்பிலிருந்து எதிர்ப்பும் கிளம்பியது.

இதுகுறித்து நித்யானந்தா பி.எம்.ஓ கைலாஷ் ட்விட்டர் கணக்கில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‘’நாட்டில் உள்ள கோவில்களை பராமரிப்பது அந்த நாட்டை ஆளும் மன்னனின் கடமை. திருக்கோவிலில் உள்ள மதில் சுவரில் உள்ள கற்களை யாரேனும் பெயர்த்தெடுத்தால் கூட அந்த நாட்டை ஆளுகின்ற மன்னன் வீழ்வான். இந்த தவறை கடும் தவம் புரியும் முனிவர்களோ அல்லது அந்த கோவிலை பூஜிக்கக் கூடிய அந்தனர்களோ செய்தால்… கோவிலில் இருந்து கிடைக்கும் வருமானம் பாதிக்கு மேல் அரசு மூலம் மருத்துவமனை, பள்ளி, மற்றும் பிற செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது எப்படி சில தத்தி மருமகள்கள் மற்றும் தத்தி நடிகர்களுக்கு புரிய வைப்போம். என் பரம சிவனை சிறுமைபடுத்தியதால் சிறுமை எண்ணம் உள்ள சீர்கெட்ட சிலருக்கு… சிறு பதில் சொல்லும் நிலைக்கு ஆளானேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *