பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு எனும் சிறப்பு முகாம் தொடக்கம்

சென்னை, அக்டோபர்-02

மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்னும் சிறப்பு முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்னும் சிறப்பு முகாமை முதலமைச்சர் துவக்கி வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளையும் முதல்வர் பார்வையிட்டார். மேலும், அங்கு வந்திருந்த வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் விதமாக சணல் பைகளை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இம்முகாமில் மொத்தம் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு, தானிய வகைகள், சணலால் செய்யப்பட்ட பைகள், செம்பினால் ஆன தண்ணீர் குவளைகள், தேங்காய் ஓடுகளால் ஆன கலை பொருட்கள், மரப்பேனா, பாக்குமட்டை, பனை ஓலை, கரும்பு சக்கையினால் செய்யப்பட்ட பொருட்கள், உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *