பிரபல இந்தி நடிகர் இர்பான் கான் மரணம் – அதிர்ச்சியில் இந்தி திரையுலகம்..!

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மும்பை, ஏப்ரல்-29

கடந்த1988-ம் ஆண்டு வெளியான சலாம் பாம்பே என்ற படம் மூலம் இர்பான் கான் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் வில்லன், குணச்சித்திர வேடம், நகைச்சுவை என அனைத்திலும் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் பாலிவுட் மட்டுமல்லாது ‘லைஃப் ஆஃப் பை’, ஜுராசிக் வேர்ல்டு போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். விளம்பர படங்களிலும் மாடலிங் செய்து வந்தார்.

இவர் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக நேற்றிரவு அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அவரது மறைவு இந்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சனிக்கிழமை இவரின் தாயார் சாயிதா பேகம், 95, ஜெய்ப்பூரில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டதால், ஜெய்பூருக்கு செல்ல முடியாத நிலையில், வீடியோ காலில் அழுத படி தாயின் இறுதி சடங்குகளை இர்பான் கான் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *