ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை – கேரள உயர்நீதிமன்றம்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்யும் கேரள அரசின் முடிவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திருவனந்தபுரம், ஏப்ரல்-28

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வர்களின் பொது நிவாரண நிதி மூலம் நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கேரளாவில் கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பளத்தை 5 தவணைகளாக, அதாவது ஒவ்வொரு மாதமும் 6 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உள்ளது. இதனை எதிர்த்து அரசு ஊழியர்கள் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை எனக்கூறிய உயர்நீதிமன்றம், கொரோனா நிவாரணத்துக்காக அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்யும் கேரளா அரசின் உத்தரவுக்கு 2 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *