கீழடி ஆய்வை 100 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளவேண்டும்: சீமான்

சென்னை, அக்டோபர்-02

காமராஜரின் 45-வது நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கீழடி ஆய்வை ஒரு சடங்குக்கு நடத்தக்கூடாது, முழுமையான 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதேபோல் ஆதிச்சநல்லூர் ஆயவையும் மேற்கொள்ள வேண்டும்.  பிரதமர் மோடி பல இடங்களில் தமிழை மேற்கோள் காட்டுவது எங்களுக்கு பெருமை. சமஸ்கிருத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழுக்கு கொடுப்பதில்லை. தமிழ் ஆட்சி மொழியாக கொண்டுவந்தால் மட்டுமே வாழும் இதை செய்ய தவறினால் பிரதமரின் இந்த பேச்சுக்கள் தமிழர்களை உசுப்பேத்தும் செயல் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *