தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா – பாதிப்பு 2058ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-28

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 80 பேர் ஆண்கள், 41 பேர் பெண்கள். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 673ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று மட்டும் 27 பேர் குணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1128ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *