380 கோடி வாங்கி இப்படி செய்யலாமா பிகே? – காயத்ரி ரகுராம் சரமாரி கேள்வி

பிரசாந்த் கிஷோர் போலி ஐடிகள் மூலம் மீம்ஸ்கள் போட வைக்கிறார்.. பிரசாந்த் கிஷோர் வாங்கிய 380 கோடிக்கு இப்படிச் செய்வது சிறந்ததா? என்று திமுகவுக்கு பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

சென்னை, ஏப்ரல்-28

இது குறித்து காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ள ட்விட்டில், “பிரதமர் மோடிக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார்… ஏனென்றால் அவருக்கு மோடி தேவை… ஆனால் இன்று திமுகவுக்கு பிகே தேவை.. ஏனென்றால், பிகேவிற்கு ஒரு சான்ஸை ஏற்கனவே மோடி தந்திருந்தார். யுக்திகளை வகுக்கும் ஒரு தமிழரை திமுகவால் கண்டுபிடிக்க முடியவில்லையா? இன்று திமுகவுக்காக 380 கோடிக்கு பணிபுரியும் பிரசாந்த் கிஷோர் முஸ்லிம்களைத் தூண்டிவிடுவதை உத்தியாக மேற்கொள்கிறார். அதோடு போலி ஐடிகள் மூலம் மீம்ஸ்களையும் போட வைக்கிறார். பிரசாந்த் கிஷோர் வாங்கிய 380 கோடிக்கு இப்படி செய்வது சரியா? போலி ஐடி மூலம் மீம்ஸ் போட எதுக்கு 380 கோடி செலவு செய்ய வேண்டும்? இதான் உங்க யுக்தியா? திமுகவுக்கு சொந்தமாக உத்திகளை பயன்படுத்தி திட்டங்கள் எதுவும் போட தெரியாதா? அந்த 380 கோடியை அரசு ஆஸ்பத்திரிகள், அரசுப் பள்ளிகளுக்கு ஏன் செலவிட முடியாது? அதை இப்போது வரைக்கும் ஏன் திமுக செய்யவில்லை? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *