கீழடியின் அடையாளங்களை பாதுகாக்க அருங்காட்சியகம் தேவை: திருமா

சென்னை அக்டோபர்-02

காமராஜரின் 45-வது நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,, ஆட்சி அதிகாரத்தில் மதவெறி சக்திகளின் கை வலிமை பெற்று உள்ளது, சனாதனத்தை வலியுறுத்த தேசிய கல்வி கொள்கையை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வு ஆள் மாறாட்டம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும். பிரதமர் மோடி தமிழ் மொழியின் சிறப்புகளை பேசுவதை ஏற்க முடியாது, அது மேலும் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது. இந்தியை மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. கீழடியில் முதல் 3 கட்ட ஆய்வுகள் முடிவுற்று அறிக்கையை விரைவாக வெளியிட வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்து. கீழடி அடையாளங்களை பாதுகாக்க தமிழகத்திலே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *