அம்பத்தூரில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா..!

சென்னையில் அம்பத்தூா் மண்டலத்தில் மட்டும் நேற்று (ஏப்ரல் 27) ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-28

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 570-ஆக அதிகரித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை தொடக்கத்தில் மணலி மற்றும் அம்பத்தூா் மண்டலங்களைத் தவிா்த்து மற்ற 13 மண்டலங்களின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மணலியில் ஒருவருக்கும், அம்பத்தூரில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அம்பத்தூா் மண்டலத்தில் மட்டும் ஒரே நாளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 27) 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை

திருவொற்றியூா் 15

மணலி 1

மாதவரம் 3

தண்டையாா்பேட்டை 66

ராயபுரம் 158

திரு.வி.க. நகா் 94

அம்பத்தூா் 15

அண்ணா நகா் 53

தேனாம்பேட்டை 56

கோடம்பாக்கம் 54

வளசரவாக்கம் 17

ஆலந்தூா் 9

அடையாறு 17

பெருங்குடி 9

சோழிங்கநல்லூா் 2

பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா் 1

மொத்தம் 570

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *