கொரோனாவை ஓட விட்ட ஈரோடு..! பாதிப்பில்லாத மாவட்டமாக அறிவிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் மாறியுள்ளது.

ஈரோடு, ஏப்ரல்-28

உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாஇப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம், இன்று 7-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1101 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் மாறியுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே 65 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் ஒருவர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஞ்சிய 4 பேரும் இன்று குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் கொரோனாவை வென்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை, கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *