கொரோனா விஷயத்தில் மக்கள் விளையாட்டா இருக்காங்க.. முதல்வர் வேதனை

காய்கறி சந்தைகளில் தனி மனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை. கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை. ஏப்ரல்-28

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 12 ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை தலைமைச்செயலத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய முதல்வர், கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கரோனா பரவலை தடுக்க முடியும். வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆரம்ப கால கட்டத்திலேயே மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், எளிதாக தடுக்கலாம். காய்கறி சந்தைகளை கையாள்வதில் தான் பிரச்னை. அதனை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். காய்கறி சந்தைகளில் தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை. கரோனா குறித்து காவல்துறையும், உள்ளாட்சி துறையும் ஒலிபெருக்கி மூலம் வீதிவீதியாக தெரிவிக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *