பதவிக்காக அந்தர் பல்டி அடிக்கும் கட்சி திமுக-அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, அக்டோபர்-02

சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அவரது 45-வது நினைவு நாளையொட்டி அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக பலவீனம் அடையும்போது மட்டும் மொழியை ஆயுதமாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். அதிகாரமிக்க பதவியில் 17 ஆண்டு திமுக இருந்தபோது தமிழை ஆட்சி மொழியாக ஆக்காமல் இப்போது வாய் புளித்ததோ… மாங்காய் புளித்ததோ… என்று பேசுகிறார்கள். மக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர் வைப்பதில் தவறில்லை என்றும், அதிமுகவின் சாதனைகளை கூறினாலே மக்கள் தானாக வாக்களிப்பார்கள், ஆகையால் அதிமுக தான் எப்போதும் வெற்றி பெறும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *