கோவையில் வீடு, வீடாக நிவாரணப்பொருட்கள் வழங்கும் அமைச்சர் SP வேலுமணி..!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், ஏழை எளிய மக்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, வீடாக நிவாரண பொருட்களை வழங்கினார்.

கோவை, ஏப்ரல்-28

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய மக்கள் வேலையின்றி உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மக்களுக்கான தேவைகள் குறித்து அறிந்து அதற்கான உதவிகளை களத்தில் நின்று செய்து வருகிறார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் துயர் துடைக்கும் வகையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதி பொதுமக்களுக்கு அமைச்சர் வேலுமணி நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதேபோல் தனது தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கி வருகிறார். இதனால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் முழுவதும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கும் பணியை துரிதப்படுத்தியிருக்கிறார்.

ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட இருக்கும் இந்நேரத்தில் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க வழியில்லாமல் இருக்கும் கோவை மாவட்ட ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு நிவாரண பொருட்கள் சென்று சேருவதில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும் என மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறியதோடு அனைத்து தொகுதிகளுக்கும் நிவாரணப் பொருட்களை அமைச்சர் அனுப்பி வருகிறார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, உப்பு என வீட்டிற்க்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டு வருகிறது.

தனது தொகுதியான தொண்டாமுத்தூரில் முகாமிட்டிருக்கும் அமைச்சர் வேலுமணி கடந்த சில வாரங்களாக மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் நேரிடையாக ஈடுபட்டுள்ளார். தொகுதியின் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்பதுடன் அவற்றை நிவர்த்தி செய்ய உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகளையும் இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு உதவ வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சரின் துரித நடவடிக்கை தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *