தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா – பாதிப்பு 1,937 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-27

கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில் 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1101 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 81. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,101. இன்று உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

இதுவரை செய்யப்பட்ட 94,781 கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனையில் இன்று மட்டும் 7,176 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 86,339 நபர்களுக்கும் இன்று மட்டும் 6,753 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், இன்றைக்கு புதிதாக 52 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,937 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *