காமராஜர் நினைவுதினம்: தலைவர்கள் மரியாதை

சென்னை, அக்டோபர்-02

பெருந்தலைவர் காமராஜரின் 45-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோரும் கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *