அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது – தமிழக அரசு

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஈட்டிய விடுப்பு அடுத்த ஒரு ஆண்டுக்கு நிறுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-27

தமிழக அரசு ஊழியர்களின் ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையில் கூறியதாவது; ஆண்டுதோறும் அரசு ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்கு ஊதியத்தை பெறுவார்கள். இந்நிலையில் கொரோனாவால் தமிழக அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுகிறது. மாநில நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கும் இந்த உத்தரவு பொருந்தும். ஈட்டிய விடுப்பு ஊதியத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் என ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *