சென்னையில் எந்த மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்? – முழு விவரம் வெளியீடு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, ராயபுரத்தில் 145 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல்-27

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 523-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. வடசென்னை பகுதியான ராயபுரத்தில் 145 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திரு.வி.க.நகரில் 85 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 54 பேருக்கும், அண்ணாநகரில் 45 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை ;-

திருவொற்றியூா் 14
மணலி 1
மாதவரம் 3
தண்டையாா்பேட்டை 65
ராயபுரம் 145
திரு.வி.க. நகா் 85
அம்பத்தூா் 2
அண்ணா நகா் 45
தேனாம்பேட்டை 55
கோடம்பாக்கம் 54
வளசரவாக்கம் 17
ஆலந்தூா் 9
அடையாறு 17
பெருங்குடி 8
சோழிங்கநல்லூா் 2
பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா் 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *