இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,892-ஆக உயர்வு – 872 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில், இதுவரை 872 பேர் பலியாகி உள்ளனர்.

டெல்லி, ஏப்ரல்-27

இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளியை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 27,892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது. 6185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 8068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 342 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 3301 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 151 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2918 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,396 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். 381 குணமடைந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *