மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி கடன் உதவி…ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

டெல்லி, ஏப்ரல்-27

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அனைத்து முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன. மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பிராங்ளின் டெம்பிள்டன் (franklin templeton) நிறுவனம் 6 திட்டங்களை முடக்கியதையடுத்து, மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ரிசர்வ் வங்கி, இந்த கடனுதவியை அறிவித்துள்ளது. நிலையான ரெப்போ விகிதத்தில் 90 நாட்கள் ரெப்போ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறி உள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த கடனுதவியை அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *