சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாத கால அவகாசம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் மக்கள் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாத கால அவகாசம் அளிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல்-27

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வேலையை இழந்து வருமானமின்றி தவிக்கின்றனர். இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் எந்தவித அபராதமுமின்றி 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உள்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் ஜூன் 30ம் தேதி வரை வரி செலுத்தத் தேவையில்லை எனவும் இந்த மூன்று மாத கால அவகாசத்திற்கும் எந்தவித அபராதமும் விதிக்கப்படாது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *