உலகளவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை எட்டியது..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியுள்ளது.

ஏப்ரல்-27

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்த் தொற்றால் 210-க்கும் மேற்பட்ட நாடுகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளுமே அதிக உயிர்ச் சேதங்களை சந்தித்துள்ளன.

இந்த நிலையில், உலகளவில் இன்று காலை நிலவரப்படி 2 லட்சத்து 7 ஆயிரம் பலியாகியுள்ளனர். மொத்தம் 2,995,043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 9,87,322 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 55,415 பேர் பலியாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *