இந்தியாவில் ஆபாச படங்கள் பார்ப்போர் எண்ணிக்கை 95% அதிகரிப்பு – கூகுள், பேஸ்புக், டுவிட்டருக்கு என்.சி.பி.சி.ஆர் நோட்டீஸ்

இந்தியாவில் இணையம் மூலம் ஆபாச படம் பார்ப்போர் எண்ணிக்கை கடந்த மாதத்தில் ஒப்பிடுகையில் 95 சதவீதம் பார்வையாளர்களின் வரத்து அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்), இணைய, சமூக வலைதளங்களான கூகிள், டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

டெல்லி, ஏப்ரல்-26

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால், இளைஞர்களை அதிகம் பொழுதுபோக்கும் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களில் உலக அளவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த மாதத்தில் ஒப்பிடுகையில் 95 சதவீதம் பார்வையாளர்களின் வரத்து அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘போர்ன்ஹப்’ உள்ளிட்ட 827 ஆபாச இணையதளங்கள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் போர்ன் ஹப் தகவல் படி இந்தியாவிலிருந்து 91 சதவீத இந்தியர் அவர்களின் தளங்களை செல்போன் மூலம் பயன்படுத்துவதாக தெரிவிக்கிறது. ஆன்லைன் ஆபாச படங்களில் சிறார்களை பயன்படுத்தும் படங்களை பார்ப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்), இணைய, சமூக வலைதளங்களான கூகிள், டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சிறுவர் பாலியல் மீறல் மற்றும் ஆபாசப் பொருள் தொடர்பான புகார்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு கூகிள், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களிடம் தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கூகுள், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், ஆபாச படங்கள் வெளியாவதை சமாளிக்க, என்ன மாதிரியான கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் கேட்டுள்ளது.

டுவிட்டர் நிறுவனத்திடம், ‘உங்களது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர் டுவிட்டரில் ஒரு கணக்கை தொடங்க தகுதியுடையவர் என்று கூறப்படுகிறது. 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஒரு கணக்கைத் திறக்க நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்றால், மற்ற பயனர்களை டுவிட்டரில் ஆபாசப் படங்கள், இணைப்புகள் போன்றவற்றை வெளியிடவோ அல்லது பிரசாரம் செய்யவோ அனுமதிக்க கூடாது என்று கமிஷன் கருதுகிறது’ என்று தெரிவித்துள்ளது. இவ்வாறாக ஒவ்வொரு நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், வருகிற ஏப். 30ம் தேதிக்குள் கூடுதல் தகவல்கள் மற்றும் பதில்களை அனுப்ப கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *