சென்னையில் சலூன் நடத்தி வந்தவருக்கு கொரோனா – அச்சத்தில் மக்கள்

சென்னையில் சலூன் கடை நடத்தி வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம், பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஏப்ரல்-26

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நெற்குன்றத்தில் சலூன் கடை நடத்தி வந்தவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவரை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருடைய மனைவி, மகன் ஆகியோரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சலூன் கடைக்கு வந்து சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் குறித்து விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். அப்பகுதி சீல் வைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *