இந்தியாவில் ஒரு லட்சம் கொரோனா பரிசோதனைகள் தேவை – ராகுல் காந்தி வலியுறுத்தல்

நாளொன்றுக்கு 1 லட்சம் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லி, ஏப்ரல்-26

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 26,496 ஆகவும் உயிரிழப்பு 824 ஆகவும் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, ‘கொரோனாவை ஒழிப்பதற்கு விரைவான பரிசோதனை முக்கியமானது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் தற்போது 40,000 பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பரிசோதனைகளாவது மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு போதுமான கருவிகள் நம்மிடம் இருப்பதால் பிரதமர் மோடி இது தொடர்பாக விரைந்து செயல்பட்டு சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *