தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா, பாதிப்பு 1885ஆக உயர்வு – இதுவரை 1020 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்கு மேலும் ஒருவர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-26

கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 1885-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1020 பேர் குணமடைந்துள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 64 பேரில் 28 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் புதிதாக 15 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *