தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2,76,183 வாகனங்கள் பறிமுதல் – ரூ. 3.27 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 3,24,269 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-26

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பல்வேறு பகுதிகளில் வெளியில் சுற்றுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 3,24,269 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 3,06,339 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், 2,76,183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ.3.27 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *