வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிககை விடுத்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-26

வெப்பசலனம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில், இன்று அதிகாலை முதல் இடி, மின்னல், சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு குளுமை நிலவியது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், பல இடங்களில் மின்சாரம், இணையதள தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக, அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம்,புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடலோர மாவட்டங்களில், மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிககை விடுத்துள்ளது. புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *