ஜோதிகாவுக்கு ஆதரவா? பதறியடித்து மறுப்பு தெரிவித்த விஜய் சேதுபதி..

ஜோதிகா சர்ச்சை விவகாரத்தில் தான் தெரிவித்ததாக வெளியான கருத்துகளுக்கு ஊவிஜய் சேதுபதிமறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-25

சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா கோவில்களைப் பற்றி பேசிய வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவில்களுக்கு பெயிண்ட் அடிக்கிறீர்கள், நன்றாக பராமரிக்கிறீர்கள் ஆனால் பள்ளிக்கூடம், மருத்துவமனையும் முக்கியமான ஒன்று தான். கோவில் உண்டியலில் காசு போடுவதை விட அதற்கு உதவுங்கள் என்று அந்த விழாவில் பேசியிருந்தார். இந்த பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி கண்டனங்கள் வலுத்துவருகிறது.
ஜோதிகாவிற்கு ஆதரவாக ஒரு தரப்பினர் குரல் கொடுத்த நிலையில், அவருக்கு எதிராக பல திரைத்துறை பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி,… ஜோதிகாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பொய்யான தகவல் ஒன்று உலா வந்தது.

அதில், ஜோதிகா அவர்களின் துணிவான பேச்சுக்கு பாராட்டுக்கள் என்றும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். மனிதனை மனிதன் தான் காப்பாற்ற வேண்டும் கடவுளால் வேடிக்கை பார்க்கத் தான் முடியும் என்றும் கோவில்கள் விரைவில் மருத்துவமனையாக மாற்றும் காலம் நெருங்கி விட்டது என்றும் விஜய்சேதுபதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது போல் யாரோ ஒரு மர்ம நபர் போட்டோ ஷாப்பில் விஜய் சேதுபதியின் ட்விட்டர் கணக்கு போலவே உருவாக்கி இந்த தகவலை பரப்பி விட்டார்.

ஆனால் இதுபோன்ற ஒரு பதிவை தான் எழுதவில்லை. அது பொய்யானது என விஜய் சேதுபதி ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *