தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா, பாதிப்பு 1821ஆக உயர்வு – ஒரே நாளில் 94 பேர் டிஸ்சார்ஜ்…அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் புதிதாக 66 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-25

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 66 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது.
7,707 மாதிரிகளை பரிசோதனை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் வசதி உள்ளது. சென்னையை சுற்றி அதிக மக்கள்தொகை உள்ளதால் பாதிப்பும் உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் 41 ஆக அதிகரித்துள்ளது. சென்னை, கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 முது நிலை மருத்துவ மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரத்தில், தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 7 பேர், தென்காசியில் 5 பேர், மதுரையில் 4 பேர், விருதுநகர், பெரம்பலூர் தலா 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *