தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, திண்டுக்கல், சேலம், திருப்பூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்னகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-25

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,; தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, திண்டுக்கல், சேலம், திருப்பூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்னகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தேனி, மதுரை நீலகிரி, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் சூறாவளி காற்று 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *