ஜூன் 30 வரை பொது இடங்களில் கூட்டம் கூடக்கூடாது – அதிகாரிகளுக்கு உ.பி. முதல்வர் உத்தரவு

உத்தரப்பிரதேசச்சில் வரும் ஜூன் 30 -ஆம் தேதி வரை பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

லக்னோ, ஏப்ரல்-25

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 -ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வரும் ஜூன் 30 -ஆம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜூன் 30 -ஆம் தேதி வரை கூட்டம் கூடுவதற்கு அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. மேலும் சூழ்நிலையைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *